Home கலை உலகம் டிவிட்டரில் பிரியங்கா சோப்ராவுக்கு 7 மில்லியன் ரசிகர்கள்

டிவிட்டரில் பிரியங்கா சோப்ராவுக்கு 7 மில்லியன் ரசிகர்கள்

812
0
SHARE
Ad

Priyanka-Chopra1மும்பை, செப்டம்பர் 23 – பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவை சமூக வலைதளமான டிவிட்டரில் பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை 7 மில்லியனைக் கடந்துள்ளது.

32 வயதான பிரியங்கா கடந்த 2009ஆம் ஆண்டு டிவிட்டர் தளத்தில் இணைந்தார். இதையடுத்து நாள்தோறும் அவரைப் பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் தனது வலைத்தள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் பிரியங்கா. “எனது ஏழு மில்லியன் டிவிட்டர் ரசிகர்களுக்கும் நன்றி. நமது குடும்பம் பெரிதாகி வருகிறது. உங்களது அன்பே என்னை முன்னோக்கிச் செல்ல வைக்கிறது,” என்று தனது மகிழ்ச்சியை டிவீட் செய்துள்ளார் பிரியங்கா.

#TamilSchoolmychoice

டிவிட்டர் தளத்தில் பிரபலமாக உள்ள இந்தியர்களின் பட்டியலில் இவர் நான்காம் இடத்தில் உள்ளார். இதே தளத்தில் முதலிடத்தில் உள்ளார் நடிகர் அமிதாப் பச்சன்.

10 மில்லியன் ரசிகர்கள் அவரை பின் தொடர்கிறார்கள். ஷாரூக்கான் 9.04 மில்லியன் ரசிகர்கள், ஆமீர்கான் 8.46 மில்லியன் ரசிகர்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.