மந்திரி பெசார் பதவிக்கு கூடுதலாக பெயர்களை பரிந்துரைக்க வேண்டும் என்று சுல்தான் கேட்டுக் கொண்டும் கூட பக்காத்தான் கட்சிகளான அவை அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றும், தாங்கள் அறிவித்த வேட்பாளைரையே நியமிக்கும் படி சுல்தானுக்கு அக்கட்சிகள் நெருக்கடி கொடுத்தன என்றும் சிலாங்கூர் சுல்தானின் தனிப்பட்ட செயலாளர் டத்தோ முகமட் முனீர் பாணி தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், மந்திரி பெசார் விவகாரத்தில் அரண்மனையின் தலையீடு இருந்ததாகக் கூறப்படுவதையும் முனீர் மறுத்தார்.
சுல்தான் தனது மாநில அதிகாரத்திற்கு உட்பட்ட அளவில் தான் இந்த விவகாரத்தில் செயல்பட்டதாகவும் முனீர் குறிப்பிட்டார்.
அஸ்மின் அலியை தேர்வு செய்தால் பிகேஆர் மட்டுமின்றி பக்காத்தானின் கூட்டணிக் கட்சிகளான பாஸ் மற்றும் ஜசெக ஆகிய இரண்டும் ஆதரவு தெரிவிக்கும் என்ற நம்பிக்கையில் தான் சுல்தான் இம்முடிவை எடுத்ததாகவும் முனீர் தெரிவித்தார்.