இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அஸ்மின் அலி, எல்லா விவகாரங்களையும் மொத்தமாக தீர்வு காண முடியாது. எனினும் ஒரு சில பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வு காணலாம் என்றும் அஸ்மின் அலி குறிப்பிட்டார்.
என்றாலும், எதிர்காலத்தில் வதந்திகளைத் தவிர்ப்பதற்காக சிலாங்கூர் தண்ணீர் குத்தகை பொதுவில் வைக்கப்படும் என்றும் அஸ்மின் அலி தெரிவித்தார்.
அத்துடன் சர்ச்சைக்குரிய கின்ராரா – டாமன்சாரா நெடுஞ்சாலை (கிடாக்ஸ்) விவகாரத்திலும் அஸ்மின் அலியின் அதிரடி நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது.