Home உலகம் ஐநா.சபை கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சனையை விவாதிக்க பாகிஸ்தான் திட்டம்!

ஐநா.சபை கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சனையை விவாதிக்க பாகிஸ்தான் திட்டம்!

581
0
SHARE
Ad

unஇஸ்லாமாபாத், செப்டம்பர் 24 – இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவும் காஷ்மீர் பிரச்சனை தொடர்பான விவாதங்களை விரைவில் நடைபெற இருக்கும் ஐநா பொதுசபை கூட்டத்தில் எழுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கும் ஐநா.சபை கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாளை அமெரிக்கா புறப்படுகின்றார். இதனை தொடர்ந்து அங்கு அவர் வரும் 26-ம் தேதி உரையாற்றுவார் என்று கூறப்படுகின்றது.

அவரது உரையில் அண்டைநாடுகளான இந்தியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்டவைகளுடன் தங்கள் நாடு கொண்டிருக்கும் உறவு பற்றியும், அந்நாடுகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

அதே சமயத்தில் ஐநா.சபையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானிடையே நீண்ட காலமாக நிலவி வரும் காஷ்மீர் விவகாரத்தை அவர் எழுப்புவார் என்று பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, நவாஸ் ஷெரீப் சந்திப்பதற்கான சாத்தியக் கூருகள் இல்லை என்று கூறப்படுகின்றது. இதனிடையே பிரதமர் மோடி, நவாஸ் ஷெரீப் இடையே சந்திப்பு நிகழாது என்று இந்தியா கூறியுள்ள நிலையில், பாகிஸ்தான் தரப்பிலும் அதை உறுதிபடுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.