Home கலை உலகம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குனராகிறார்?

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குனராகிறார்?

712
0
SHARE
Ad

ar-rahmanசென்னை, பிப்.25-பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குனராக அவதாரம் எடுக்கப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ், ஹிந்தி மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களில் இசையமைத்து உலக அளவில் புகழ்பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஆஸ்கார் விருதுகளையும் தட்டிச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் இசையமைப்பாளராக இருந்துகொண்டு தன் மனதில் உதித்த ஒரு கருவை வைத்து விரைவில் படம் ஒன்றையும் இயக்க இருக்கிறார்.

#TamilSchoolmychoice

இதற்காக வெகுநாட்களாக ஒரு கதையை எழுதி தயாராக வைத்து இருப்பதாக பிரபல ஒலி பொறியிளாளரும் (சவுண்ட் எஞ்சினியர்) ரஹ்மானின் நண்பருமான ரசூல் பூக்குட்டி கூறியுள்ளார்.

ரஹ்மானின் இயக்கத்தில் வரும் இத்திரைப்படத்தை ரசூல் புக்குட்டியும் ரஹ்மானும் இணைந்து  இயக்குவார்கள் என்று எதிர் பார்க்கப் படுகிறது.