Home கலை உலகம் வாரம் ஒரு நேயருக்கு சுற்றுலா வாய்ப்பு – மின்னலின் ‘தாலாட்டுதே வானம்’ புதிய திட்டம்!

வாரம் ஒரு நேயருக்கு சுற்றுலா வாய்ப்பு – மின்னலின் ‘தாலாட்டுதே வானம்’ புதிய திட்டம்!

470
0
SHARE
Ad

கோலாலம்பூர், செப்டம்பர் 25 – அரசாங்க வானொலியான மின்னல் பண்பலையில் திங்கள் முதல் ஞாயிறு வரை ஒலியேற்றப்படும் ‘தாலாட்டுதே வானம்’ நிகழ்ச்சியில் பல சிறப்பு அங்கங்கள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பயணம் என்ற சிறப்பு அங்கம் மின்னல் பண்பலை நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதாவது, மின்னல் பண்பலையில் ‘தாலாட்டுதே வானம்’ நிகழ்ச்சியில் பங்குபெறும் நேயர்கள், தாங்கள் விரும்பும் சுற்றுலா இடங்களையும், உணவகங்களையும் மின்னல் அறிவிப்பாளர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

#TamilSchoolmychoice

Minnal

(தேர்ந்தெடுக்கப்பட்ட நேயர் கோமகள் (நடுவில்) உடன் மின்னல் அறிவிப்பாளர்கள் லோகேஸ்வரி, ரவின் சண்முகம்)

சிறப்பான இடங்களைக் கூறும் நேயர்களில் வாரம் ஒரு நேயரை மின்னல் குழு தேர்வு செய்து அவர்கள் கூறிய இடத்திற்கு அழைத்துச் செல்வார்கள் என அந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் நிர்மலா சரவணன் தெரிவித்துள்ளார்.

மேலும், வாரந்தோறும் தங்களது நேயர்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லும் மின்னல், அதை காணொளியாகவும் பதிவு தங்களது அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்யவுள்ளது.

அதன் படி, கடந்த வாரம், ஷா ஆலமைச் சேர்ந்த வங்கி அதிகாரியான கோமகள் என்ற நேயர் தேர்வு செய்யப்பட்டு, அவருக்குப் பிடித்த இடமான தஞ்சோங் ஹாராப்பான் கடலுணவுக்கு அழைத்துச் சென்று மின்னல் பண்பலை மகிழ்ச்சிபடுத்தியிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியை மின்னல் குழுவைச் சேர்ந்த லோகேஸ்வரி கணேசன் சிறப்பாக வழிநடத்தியுள்ளார்.

 -ஃபீனிக்ஸ்தாசன்