Home உலகம் சிரியாவுக்கு 80 நாடுகளில் இருந்து 15 ஆயிரம் தீவிரவாதிகள் சென்றுள்ளனர் – ஐ.நா.வில் ஒபாமா ...

சிரியாவுக்கு 80 நாடுகளில் இருந்து 15 ஆயிரம் தீவிரவாதிகள் சென்றுள்ளனர் – ஐ.நா.வில் ஒபாமா தகவல்

502
0
SHARE
Ad

obama3ஐ.நா, செப்டம்பர் 26 – சிரியாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக 80 நாடுகளில் இருந்து 15 ஆயிரம் தீவிரவாதிகள் சென்றுள்ளனர் என ஐ.நா.வில் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார்.

வெளிநாட்டு தீவிரவாதிகளை தடுக்கும் தீர்மானம் குறித்து ஐ.நா.பாதுகாப்பு ஆணையக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா பேசியதாவது, “சிரியாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக, 80 நாடுகளில் இருந்து 15 ஆயிரம் தீவிரவாதிகள் சென்று ஐ.எஸ்.ஐ.எல், ஏ.என்.எப் மற்றும் அல்கய்தாவின் இதர அமைப்புகளில் சேர்ந்துள்ளதாக அமெரிக்க உளவு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.”

“இவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்தி  இப்பகுதி மக்களுக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளனர். இவர்களின் செயல்பாடுகளை நாம் ஏற்கனவே கண்டுள்ளோம்.

#TamilSchoolmychoice

இந்த வெளிநாட்டு தீவிரவாதிகள் தங்கள் தாய்நாட்டுக்கு திரும்பி கொலை வெறி தாக்குதலை நடத்தலாம். இவற்றை தடுப்பதற்காகவே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டபூர்வமான இந்த தீர்மானம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. எல்லை கடந்து வன்முறையில் ஈடுபடும் இந்த தீவிரவாதிகள் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். தீவிரவாதிகளின் யுக்திகள் புதிதல்ல. இங்கு அமெரிக்கா உட்பட பல நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளோம்.

நமது நாட்டு அப்பாவி மக்களை தீவிரவாதிகள் கொல்வதை பார்த்துவிட்டோம். தற்போது பிரெஞ்சு குடிமகன் ஹெர்வே கோர்டெலை கொன்றுள்ளனர். இந்த சவாலை எந்த ஒரு நாடும் தனியாக சந்திக்க முடியாது என ஒபாமா கூறினார்.