புதுடெல்லி, செப்டம்பர் 26 – “இந்தியத் தயாரிப்பு” என்றால் அதற்கென தனித்த வரவேற்பு என்றுமே இருந்ததில்லை, ஒரு சில பொருட்களைத் தவிர!
இதனை உணர்ந்து கொண்டுள்ள, நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் நேற்று முதல் ‘இந்தியாவில் தயாரியுங்கள்’ என்ற பிரச்சாரத்தை உலக வணிகர்களுக்கு அறிமுகப்படுத்தி, பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளது.
சிங்கத்தின் பிம்பத்தோடு கூடிய ‘மேக் இன் இந்தியா’ சின்னம் பின்னணியில் – பிரச்சாரக் கூட்டத்தில் இந்திய அரசாங்கத் தலைவர்கள்.
இந்தியத் தயாரிப்பு பொருட்களை விளம்பரப்படுத்துவதை விடுத்து, இந்தியாவுக்கு வந்து பொருட்களைத் தயாரியுங்கள் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் பிரச்சாரத்தினால் தயாரிப்புத் துறையில் புகழ் பெற்ற பல உலக நிறுவனங்கள் இந்தியா வந்து உற்பத்தித் துறையில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசாங்க இயந்திரங்களின் தலையீடுகள், தேவையற்ற அனுமதிகள் (லைசென்ஸ்), போன்றவற்றைக் குறைத்து, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், தொழிலாளர்களின் கைத்திறனையும், உற்பத்தி ஆற்றலையும் உயர்த்தவும் இந்தப் பிரச்சாரம் வழி வகுக்கும்.
நேற்று புதுடெல்லியில் மோடி தொடக்கி வைத்த இந்த பிரச்சார நிகழ்ச்சியில் பல முக்கிய இந்திய வணிகப் பிரமுகர்களும் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை பிரதமர் மோடியின் முன் வைத்தனர்.
“மேக் இன் இந்தியா” பிரச்சாரத்தை நேற்று தொடங்கி வைக்கும் நரேந்திர மோடி. வலது புறத்தில் வர்த்தக தொழில் துறையின் இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், இடது புறத்தில் சிறிய, நடுத்தர தொழில் அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா…
பிரபல தொழிலதிபரும், இந்தியாவின் மிகப் பெரிய செல்வந்தருமான ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி “இந்தியாவில் தயாரியுங்கள்” பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகின்றார்….
பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான விப்ரோ லிமிடெட் தலைவர் அசிம் பிரேம்ஜி….
ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் சண்டா கோச்சார் “இந்தியாவில் தயாரியுங்கள்” பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகின்றார்….
பிரச்சாரக் கூட்டத்தில் வணிகப் பிரமுகர்கள் வழங்கிய கருத்துகளை உன்னிப்பாக செவிமெடுக்கும் நரேந்திர மோடி….
படங்கள் : EPA