Home தொழில் நுட்பம் ஐபோன் 6 வளைகின்றதா?

ஐபோன் 6 வளைகின்றதா?

509
0
SHARE
Ad

IPHONE6கோலாலம்பூர், செப்டம்பர் 27 – மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான ஆப்பிளின் ஐபோன் 6  திறன்பேசிகள், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. ஆப்பிள் வரலாற்றில் இல்லாத அளவில் தொடர்ந்து, விற்பனையில் சாதனை நிகழ்த்தி வரும் நிலையில், இந்தத் திறன்பேசிகளின் குறிப்பிடத்தக்க குறைபாடு ஒன்று தற்போது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் திறன்பேசிகள் வெகு எளிதில் வளையும் தன்மை கொண்டவையாக உருவாக்கப்பட்டுள்ளன. அதாவது காற்சட்டை பைகளில் பயனர்கள் திறன்பேசிகளை வைத்துக் கொண்டு இருக்கும் போது அவை தானாகவே  வளைந்து விடுவதாகக் கூறப்படுகின்றது.

இந்த குறைபாடுகள் குறித்து ஆப்பிள் நிறுவனம் கூறுகையில், “குறைந்த எடையில் அதிக வலுவான திறன்பேசிகளை உருவாக்க திட்டமிட்டோம். அதற்காக ஐபோன் 6 அத்தகைய தன்மை கொண்ட ‘அனாடிசைட் அலுமினியம்’ (Anodised Aluminium)- உலோகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், அதற்கு வலு சேர்ப்பதற்காக, ‘டைட்டானியம்’ (Titanium) உலோகமும் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, தற்போது கூறப்படும் குறைபாடுகள் அரிதான ஒன்றாகும்.”

#TamilSchoolmychoice

“இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ள திறன்பேசிகளில் 9-ல் மட்டுமே, இத்தகைய குறைபாடுகள் எழுந்துள்ளன. இது தொடர்பான விவரங்களுக்கு எங்களை பயனர்கள் அணுகலாம்” என்று கூறியுள்ளது.

வர்த்தகம் குறைந்தது

உலகம் இணைய மயமாகி வருவதால், தகவல்கள் உடனுக்குடன் அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. அந்த வகையில், ஐபோன் 6 மற்றும் 6 பிளஸ் திறன்பேசிகளில் எழுந்துள்ள இந்த குறைபாடுகளை, பயனர்கள் சிலர் காணொளி ஆதாரங்களுடன் இணையத்தில் பரவச் செய்தனர். இதன் காரணமாக, ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6 வர்த்தகம் சற்றே தொய்வை சந்தித்துள்ளன.

மேலும், புதிய ஐபோன்களில் மேம்படுத்தப்பட்டுள்ள ஐஒஎஸ் 8 இயங்குதளமும் குறைபாடுகள் நிறைந்ததாக உள்ளது என கூறப்படுகின்றது. திறன்பேசிகளுக்கு வரும் அழைப்புகளை ஏற்பதில் பயனர்கள் சிக்கல்களை உணர்வதாகக் கூறப்படுகின்றது. இதன் காரணமாகவும் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 6 பிளஸின் வளையும் தன்மை பற்றிய காணொளிகளைக் கீழே காண்க:

https://www.youtube.com/watch?v=wTnZ_CEhtdo