Home இந்தியா தமிழ்நாட்டுக்குத்தான் பின்னடைவு ஜெயலலிதாவுக்கு அல்ல – சோ ராமசாமி

தமிழ்நாட்டுக்குத்தான் பின்னடைவு ஜெயலலிதாவுக்கு அல்ல – சோ ராமசாமி

597
0
SHARE
Ad

choramaswamyசென்னை, செப்டம்பர் 28 – சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பால் தமிழ்நாட்டுக்குத்தான்  பின்னடைவு என்கிறார் அவரது ஆலோசகராக இருக்கும் பத்திரிகையாளர் சோ. ராமசாமி.

ஜெயலலிதாவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து ‘சோ’ ராமசாமி கூறியுள்ளதாவது: “இந்த தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு எதிரானது அல்ல.

அவருக்கு நிச்சயம் அனுதாபத்தைத்தான் இந்த தீர்ப்பு வழங்கும். தற்போதைய நிலையில் ஜெயலலிதா இல்லாத அரசியல் களம் என்பது தமிழ்நாட்டுக்குத்தானே பின்னடைவே தவிர ஜெயலலிதாவுக்கு அல்ல.

#TamilSchoolmychoice

தற்போதைய இக்கட்டான நிலையில் இருந்து மீண்டு வெளியே வருவதற்கான சட்டப்பூர்வ வாய்ப்புகள் ஜெயலலிதா முன்பு இருக்கின்றன என சோ ராமசாமி கூறியுள்ளார்.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சர்ச்சைக்குரிய நிறுவனங்களின் இயக்குநராக சோ ராமசாமியும் பணியாற்றினார் என்ற ஆதாரங்களை வெளியிட்டிருந்த ஆம் ஆத்மி கட்சி இவரையும் வழக்கில் சேர்த்திருக்க வேண்டும் என்று வலியுறுத்துவது குறிப்பிடத்தக்கது.