Home நாடு எம்எச் 17 பேரிடர்: டம்பி ஜியியின் மகனின் நல்லுடல் அடையாளம் காணப்பட்டது

எம்எச் 17 பேரிடர்: டம்பி ஜியியின் மகனின் நல்லுடல் அடையாளம் காணப்பட்டது

557
0
SHARE
Ad

Liow Tiong Laiகோலாலம்பூர், செப்டம்பர் 28 – எம்எச் 17 பேரிடரில் பலியான மலேசியர் டம்பி ஜியியின் இளைய மகன் முகமட் அஃப்ருஸ் (13 வயது) நல்லுடலை பிரேதப் பரிசோதனையின் வழி டச்சு அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

இதையடுத்து இந்தப் பேரிடரில் பலியான மலேசியர்களில் மேலும் இருவரது நல்லுடல்கள் மட்டுமே இனி அடையாளம் காணப்பட வேண்டியுள்ளது. இத்தகவலை போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் (படம்) தெரிவித்தார்.

எம்எச் 17 பேரிடரில் மொத்தம் 298 பேர் மாண்டனர். அவர்களில் 43 பேர் மலேசியர்கள் ஆவர்.

#TamilSchoolmychoice

“டம்பி ஜி என்ற பயணியின் நல்லுடல் செப்டம்பர் 9ஆம் தேதி மலேசியா கொண்டு
வரப்பட்டது. தற்போது அவரது இளைய மகனின் உடலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவரது குடும்பத்தில் பலியான 6 பேரின் நல்லுடல்களும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 5 பேரின் நல்லுடல்கள் ஏற்கெனவே மலேசியா கொண்டு வரப்பட்டுள்ளன” என்றார் லியோவ் தியோங் லாய்.

எனினும் அஃப்ருஸ் நல்லுடலை மலேசியா கொண்டு வருவதற்கான அனுமதி இன்னும்
கிடைக்கவில்லை என்றார் அவர்.

புவான்ஸ்ரீ சித்தி அமிரா குசுமா (83 வயது) மற்றும் ஷெர்லிசா சைனி (45 வயது) ஆகிய இருவருமே அடையாளம் காணப்பட வேண்டிய இரு மலேசியர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையே உக்ரைனில் பேரிடர் நிகழ்ந்த பகுதியில் மீண்டும் நுழைவதற்கான  வாய்ப்புகள் மங்கி வருவதாகக் குறிப்பிட்ட லியோவ் தியோங் லாய், அங்கு குளிர்  காலம் நெருங்கி வருவதைச் சுட்டிக்காட்டினார்.

“பேரிடர் பகுதிக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்வதாக எங்களுக்கு உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது,” என்றார் அவர்.