Home தொழில் நுட்பம் இன்ஸ்டாகிராமிற்கு சீனாவில் தடை!

இன்ஸ்டாகிராமிற்கு சீனாவில் தடை!

680
0
SHARE
Ad

Instagram 300 x200பெய்ஜிங், செப்டம்பர் 30 – இன்ஸ்டாகிராமை சீன அரசாங்கம், ஹாங்காங் புரட்சி காரணமாக தடை செய்துள்ளது.

புகைப்படம், காணொளிகளைப் பகிர்வதற்குப் பயன்படும் செயலியான இன்ஸ்டாகிராம், ஹாங்காங்-ல் ஏற்பட்டுள்ள ஜனநாயகப் புரட்சிக்குப் பெரும் பங்கு வகிக்கின்றன.

தற்போதய  நிலையில்,புரட்சியை மாணவர்கள் கையில் எடுத்துள்ளதால்,இன்ஸ்டாகிராம் மூலமாக தகவல், காணொளி மற்றும் படங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். காரணம், பெரும்பாலான சமூக வலைத்தளங்கள் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

மாணவர்களின் இந்த தகவல் பரிமாற்றம் காரணமாக கடந்த சில நாட்களில் மட்டும் புரட்சி அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி பயணமாகின்றது. ஏராளமானோர் புரட்சி தாங்கிய வாசகங்கள் மற்றும் காநோளிகளை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். அதனால் மாணவர்களின் புரட்சியை கட்டுப்படுத்தும் நோக்கில் சீன அரசாங்கம்,  இன்ஸ்டாகிராம் செயலியை தடை செய்துள்ளதாகத் தகவல் வருகின்றது.

 மேலும், சீன அரசாங்கம் டுவிட்டரைப் போன்ற நுண்பதிவுத் தளமான வெய்போ‘ (Weibo)-வையும் தணிக்கை செய்து வருகின்றது. குறிப்பாக, ஊடகத்தில் மத்தியப் பகுதியை ஆக்கிரமிப்பு செய்யுங்கள்‘ (Occupy Central), ‘ஹாங்காங் மாணவர்கள்‘  (HongKong Students) போன்ற வார்த்தைகளை தடை செய்கின்றது.

இந்த தடை பற்றி இன்ஸ்டாகிராம் நிறுவனம் கூறுகையில், “இன்ஸ்டாகிராமின் தடை உத்தரவு குறித்து ஆராய்ந்து வருகின்றோம்” என்று கூறியுள்ளது.

இன்ஸ்டாகிராமின் தடை பற்றி பொதுமக்கள் கூறுகையில், “சீனாவில், ஊடகங்களுக்கான சுதந்திரம் பறிக்கப்படுவது வாடிக்கையான ஒன்று. தற்போதைய அரசியல் சூழலில் சீனாவால் இதை மட்டுமே செய்ய முடியும்” என்று கூறியுள்ளனர்.

எனினும், மாணவர்கள் இணைய வசதி பயன்படாத ஃபயர் சேட்‘ (FireChat) எனும் புதிய செயலியைப் பயன்படுத்தி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.