Home கலை உலகம் 4500 திரைகளில் வெளியாகி சாதனை படைத்த ‘பாங் பாங்’ திரைப்படம்!

4500 திரைகளில் வெளியாகி சாதனை படைத்த ‘பாங் பாங்’ திரைப்படம்!

605
0
SHARE
Ad

bangbangமும்பை, அக்டோபர் 1 – ஹிருதிக் ரோஷன், கேட்ரினா கைஃப் ஜோடி சேர்ந்துள்ள ‘பாங் பாங்’ இந்தித் திரைப்படம் உலகம் முழுவதும் 4500 திரைகளில் வெளியாகிறது.

இதன் மூலம் மிகப்பெரிய அளவில், மிக அதிக திரையரங்குகளில் வெளியீடு காணும் கோலிவுட் படம் எனும் பெருமை இப்படத்திற்கு கிடைக்கவுள்ளது.

அதிரடியும், திகிலும் கலந்துள்ள இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ளார். வரும் வெள்ளிக்கிழமை இப்படம் திரை காணும் நிலையில், விஷால் பரத்வாஜின் ‘ஹெய்டர்’ படமும் வெளியாகிறது.

#TamilSchoolmychoice

“இது பிரமாண்டமான படைப்பு. இப்படம் தொடர்பான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறிக் கிடக்கிறது. திரையரங்குகளில் முன்பதிவு செய்ய கூட்டம் அலை மோதுகிறது.

bang-bangபடம் வெளியான முதல் நாளன்று பிரமாண்ட வரவேற்பும் ரசிகர் கூட்டமும் இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. தொடர்ந்து வரும் 5 நாள் விடுமுறை காரணமாக படத்தின் வசூல் பல்வேறு திரைச் சாதனைகளை முறியடிக்கும் என நம்புகிறோம்,” என்கிறார் பிவிஆர் சினிமாஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கௌதம் தத்தா.

‘பாங் பாங்’ படம் மொத்தம் 50 நாடுகளில் வெளியாகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மிக அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.