Home கலை உலகம் குபேந்திரன் இயக்கத்தில் ‘அங்கிள்’ மலேசியக் குறும்படம்!

குபேந்திரன் இயக்கத்தில் ‘அங்கிள்’ மலேசியக் குறும்படம்!

660
0
SHARE
Ad

Uncle - Shortfilm

கோலாலம்பூர், அக்டோபர் 1 –  ‘மெல்லத் திறந்தது கதவு’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் மிரட்டிய நடிகர் குபேந்திரன் மகாதேவன் ஒரு சிறந்த இயக்குநரும் கூட.

ஏற்கனவே, அவர் இயக்கத்தில், நடிப்பில் வெளிவந்த, ‘நான் திருடன்’ என்ற குறும்படம் அனைவராலும் பாராட்டப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், குபேந்திரன் மலேசியாவின் ஒற்றுமையை வலியுறுத்துவது போல் கதையம்சம் கொண்ட ‘அங்கிள்’ என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார்.

அதில் முக்கியக் கதாப்பாத்திரமாக நாடறிந்த பிரபல நடிகர் கே.எஸ் மணியம் மிகச் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.

இந்த படத்திற்கு ராயன் மனோகரன் ஒளிப்பதிவும், கதிரவன் ஒலிப்பதிவும் செய்துள்ளனர்.

அந்த குறும்படத்தின் காணொளியை இங்கே காணலாம்:-