Home இந்தியா வாஷிங்டனில் காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை!

வாஷிங்டனில் காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை!

655
0
SHARE
Ad

washington2வாஷிங்டன், அக்டோபர் 1 – அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். காந்தி சிலை முன் பல ஆயிரம் இந்தியர்கள் திரண்டு நின்று மோடிக்கு வரவேற்பு அளித்தனர்.

கடந்த 2000-த்தில் வாஜ்பாய் வாஷிங்டன் சென்ற போது காந்தி சிலை நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடியுடன் வெளியுறவுத் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோரும் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

namo3இதைத் தொடர்ந்து அங்கு தன்னை பார்ப்பதற்காக பலமணி நேரம் காத்திருந்த இந்தியர்களுடன் மோடி கைகுலுக்கினார். அவர்களுடன் சிறிது நேரம் பேசி மகிழ்ந்த பிறகு அங்கிருந்து புறப்பட்டார்.