Home இந்தியா உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரலுடன் நீதிபதி டிகுன்ஹா திடீர் சந்திப்பு!

உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரலுடன் நீதிபதி டிகுன்ஹா திடீர் சந்திப்பு!

532
0
SHARE
Ad

janaralபெங்களூர், அக்டோபர் 2 – கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் தேசாயை நீதிபதி டிகுன்ஹா நேற்று திடீரென சந்தித்து பேசினார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் கடந்த 2004 முதல் நடந்து வந்தது.

இவ்வழக்கை 8 நீதிபதிகள் விசாரணை நடத்திய பின் 9-வது நீதிபதியாக ஜான்மைக்கல் டிகுன்ஹா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நியமனம் செய்யப்பட்டார். விசாரணையை வேகமாக நடத்தி டிகுன்ஹா அதன் இறுதி தீர்ப்பை கடந்த 27-ம் தேதி வழங்கினார்.

அதில் ஜெயலலிதா உள்பட வழக்கில் குற்றம்சாட்டபட்ட 4 பேரையும் குற்றவாளியாக அறிவித்ததுடன், 4 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், மற்ற மூன்று பேருக்கு தலா ரூ.10 கோடி அபராதம் விதித்து பரபரப்பான தீர்ப்பு வழங்கினார்.

#TamilSchoolmychoice

ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்துள்ளது கர்நாடகம் மட்டுமல்லாமல், தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நேற்று பகல் 1.30 மணிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் வந்த நீதிபதி டிகுன்ஹா, உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் தேசாயை சந்தித்து சுமார் 1 மணி நேரம் பேசினார்.

இந்த சந்திப்பின் போது தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட வழக்கு விசாரணை பணி முடிந்து தீர்ப்பு வழங்கிய விவரத்தை தேசாயிடம் தெரிவித்தாகவும், சொத்து குவிப்பு வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட தனி நீதிமன்றத்தின் பணி முடிந்து விட்ட தகவலை அவரிடம் முறைப்படி தெரிவித்தாகவும் தெரிய வருகிறது.

மேலும் வழக்கில் நான்கு பேரை குற்றவாளியாக தீர்மானித்து, வழங்கியுள்ள தண்டனை மற்றும் அபராதம் விவரங்களையும் பதிவாளரிடம் நீதிபதி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பதிவாளரை சந்தித்து விட்டு வெளியில் வந்த நீதிபதி டிகுன்ஹா, அங்கிருந்த செய்தியாளர்களிடம் புன்னகை காட்டி எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டாராம்.

ஜெயலலிதாவை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை நீதிபதி ரத்னகலா, வரும் 6-ம் தேதி ஒத்திவைத்ததால் சோகத்தில் இருந்த ஜெயலலிதா தரப்பு வழக்கரிஞர்கள், அவசர மனு தாக்கல் செய்ய பதிவாளர் ஜெனரல் அலுவலகம் முன் காத்திருந்தனர்.

அப்போது நீதிபதி ஜான்மைக்கல் டிகுன்ஹா வந்து பதிவாளரை சந்தித்து பேசியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். ஜெயலலிதா உள்பட நான்கு பேருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என்று பதிவாளரிடம் வலியுறுத்தி இருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்தது.

டிகுன்ஹாவின் செயல்பாடுகளை வழக்கரிஞர்கள் பரணிகுமார், முத்துகுமார், தாமல் கண்ணன், எம்.எல்.ஜெகன், ஜெயராமன், சுந்தரபாண்டியன் உள்பட பலர் கவனித்தனர். சில வழக்கரிஞர்கள் நீதிபதி மீது அதிருப்தியையும் வெளிப்படுத்தினர்.