Home இந்தியா ஜெயலலிதா கைதுக்கு எதிர்ப்பு: தமிழகத்தில் தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை 19-ஆக உயர்வு!

ஜெயலலிதா கைதுக்கு எதிர்ப்பு: தமிழகத்தில் தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை 19-ஆக உயர்வு!

500
0
SHARE
Ad

jaya_cryசென்னை, அக்டோபர் 2 – சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தற்கொலை செய்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 19-ஆக அதிகரித்துள்ளது.

நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் விஷம் குடித்ததற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி அவர் புதன் கிழமை இறந்தார்.

இவருடன், ஜெயலலிதா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தற்கொலை செய்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 19-ஆக அதிகரித்துள்ளது.

#TamilSchoolmychoice

18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த சனிக்கிழமை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 4 ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

tn jjghhjஇந்நிலையில், ஜெயலலிதா கைது செய்யபப்ட்டதைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் இன்றளவும் தொடர்கிறது. புதன்கிழமை சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக-வின் மாணவரணியினரும் இணைந்து கொண்டனர்.

திருச்சியில், அதிமுக தொண்டர்கள் 5-வது நாளாக உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தனர். நாமக்கல்லில் செங்கல் சூளை உரிமையாளர்கள் சங்கத்தினர் சார்பில் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது.