Home தொழில் நுட்பம் மைக்ரோசாஃப்ட்டின் அடுத்த வெளியீடு விண்டோஸ் 9 அல்ல விண்டோஸ் 10!

மைக்ரோசாஃப்ட்டின் அடுத்த வெளியீடு விண்டோஸ் 9 அல்ல விண்டோஸ் 10!

579
0
SHARE
Ad

windows-10

கோலாலம்பூர், அக்டோபர் 3 – மைக்ரோசாஃப்ட் தனது அடுத்த இயங்குதளமான விண்டோஸ் 10 குறித்த முதற்கட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 8 -டிற்கு அடுத்ததாக விண்டோஸ் 9-ஐ உருவாக்கி வருகின்றது என்றும், இந்த வருடத்தின் இறுதியில் அதனை வெளியிடும் என்றும் ஆருடங்கள் கூறப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அந்நிறுவனம், விண்டோஸ் 10 பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

விண்டோஸ் 8-ன் தோல்வி:

மைக்ரோசாஃப்ட்-ன் இயங்குதளங்களில் விண்டோஸ் எக்ஸ்பி வர்த்தக ரீதியாக மிகப் பெரிய வெற்றி பெற்றது. அதற்கு அடுத்து வந்த இயங்குதளங்களில் விண்டோஸ் 7 மட்டுமே கூறிக் கொள்ளும்படியான வரவேற்பினைப் பெற்றது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியான விண்டோஸ் 8 வர்த்தக ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் தோல்வியைத் தழுவியது.

விண்டோஸ் 8-ல் கூறப்பட்ட மிகப் பெரிய குறைபாடு என்னவென்றால்,  எக்ஸ்பி-யைப் போன்று பயனர்கள் எளிதாக அதனைப் பயன்படுத்த முடியவில்லை. ஸ்டார்ட் பட்டி உட்பட வழக்கமாகப் பயன்படுத்தும் அத்தனை முறைகளும் முற்றிலும் மாற்றப்பட்டது. இதன் காரணமாக பயனர்கள் விண்டோஸ் 8-ஐ விரும்பவில்லை.

விண்டோஸ் 10 அறிமுகம்:

விண்டோஸ் 8-ன் தோல்வியை தொடர்ந்து மைக்ரோசாப்ட் பயனர்கள் விரும்பும் விதமான இயங்குதளத்தை அறிமுகப்படுத்த முயற்சித்து வருகின்றது. அடுத்து மைக்ரோசாப்ட் வெளியிட இருக்கும் இயங்குதளம் விண்டோஸ் 9 தான் என்று கூறப்பட்ட நிலையில்,  அந்நிறுவனம் விண்டோஸ் 10 பற்றிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த புதிய இயங்குதளமானது, கணினிகள், திறன்பேசிகள், மடிக் கணினி உட்பட அனைத்து தொழில்நுட்ப கருவிகளுக்கும் பொதுவானதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

மேலும், விண்டோஸ் 8-ல் நீக்கப்பட்ட ஸ்டார்ட் பட், விண்டோஸ் 10-ல் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. இது மட்டும் அல்லாமல், பன்முக டெஸ்க்டாப், ஒற்றத் திரையில் பல்வேறு செயலிகளை வரிசைப்படுத்தி அணுகுதல் போன்ற பல சிறப்பு அம்சங்கள் இந்த புதிய இயங்குதளத்தில் செயல்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.