Home தொழில் நுட்பம் விண்டோஸ் எக்ஸ்பி-ல் இனி ‘மால்வேர்பய்ட்ஸ்’ ஆண்டி வைரஸ்!

விண்டோஸ் எக்ஸ்பி-ல் இனி ‘மால்வேர்பய்ட்ஸ்’ ஆண்டி வைரஸ்!

619
0
SHARE
Ad

it_photo_124474மார்ச் 26 – எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் விண்டோஸ்-எக்ஸ்பி இயங்குதளத்திற்கான ‘ஆண்டி வைரஸ்’ (Anti Virus) களின் உருவாக்கம் நிறுத்தப்படுவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ள நிலையில், ‘மால்வேர்பய்ட்ஸ்’ (Malwarebytes)  நிறுவனம் எக்ஸ்பிக்கான ‘ஆண்டி வைரஸ்’ (Anti Virus) களை வழங்க முன்வந்துள்ளது.

இது குறித்து ‘மால்வேர்பய்ட்ஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விண்டோஸ்-எக்ஸ்பி இயங்குதளத்திற்கான வைரஸ்களை நீக்கவும், மால்வேர்களைக் கண்டறியவும் மால்வேர்பய்ட்ஸ் ஆண்டி வைரஸ் பல சிறப்பான ஆக்கக்கூறுகளை கொண்டுள்ளது.இதன் சேவையை, பயானாளர்களுக்கு போதுமானவரை கொடுப்பதற்கு தயாராக உள்ளோம்”என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு ‘மால்வேர்பய்ட்ஸ் ஆண்டி வைரஸ் ப்ரிமியம்’ (Malwarebytes Anti-virus Premium) -ன் விலை ஒருவருடத்திற்கு 25 அமெரிக்க டாலர்கள் ஆகும்

#TamilSchoolmychoice

ஏற்கனவே ரெட்மொன்ட்(Redmond)  ஆண்டி மால்வேர் நிறுவனம் தன் சேவையை ஜூலை மாதம் 2015 வரை நீடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.