கோலாலம்பூர் – விண்டோஸ் பயனர்களில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த செயலியாக இருந்து வந்த ‘பெயிண்ட்’ அடுத்து வரக்கூடிய மேம்படுத்தப்பட்ட விண்டோஸ் இயங்குதளங்களில் இருந்து முற்றிலும் நீக்கப்படவிருக்கிறது.
பெயிண்ட்டுக்குப் பதிலாக தற்போது ‘Windows 10 Fall Creators Update’-ல் 3டி பெயிண்ட் என்ற பயன்பாட்டைச் சேர்த்திருக்கிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.
இந்தப் புதிய அம்சம் மூலம் 3டி வடிவங்களை வரைய முடியும் என்றாலும், விண்டோஸ் இயங்குதளம் உருவாக்கப்பட்டதில் இருந்து கடந்த 32 ஆண்டுகளாய் இருந்து வரும் பெயிண்ட் அதிலிருந்து நீக்கப்படுவது வாடிக்கையாளர்களை சற்று வருத்தமடையச் செய்திருக்கிறது.