Home நாடு பாதிரியார் கடத்தலில் தாய்லாந்து கும்பலுக்குத் தொடர்பு!

பாதிரியார் கடத்தலில் தாய்லாந்து கும்பலுக்குத் தொடர்பு!

957
0
SHARE
Ad

Khalid Abu Bakarகோலாலம்பூர் – பாதிரியார் ரேமண்ட் கோ கடத்தப்பட்ட விவகாரத்தில் தெற்கு தாய்லாந்தைச் சேர்ந்த கும்பல் ஒன்றுக்குத் தொடர்பு இருப்பதாக தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து காலிட் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “3 அல்லது 4 பேரை கைது செய்து விசாரணை செய்த பிறகு, அண்மையில் நாங்கள் சுட்டு வீழ்த்திய சந்தேக நபர் தான் அக்கும்பலுக்குத் தலைவன் என்பது தெரிய வந்திருக்கிறது. அவன் தான் ஆயர் கோவைக் கடத்தியிருக்கிறான்”

“மேலும் எங்கள் விசாரணையில், அக்கும்பல் தெற்கு தாய்லாந்தைச் சேர்ந்த மற்றொரு கும்பலுடன் தொடர்பில் இருக்கிறது. இது குறித்து தாய்லாந்து காவல்துறையுடன் நாங்கள் கலந்தாலோசித்து வருகின்றோம்” என்று காலிட் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice