மார்ச் 26 – காற்று மாசுபடுதல் பற்றி ஐ.நா. சபையின் சுகாதார அமைப்பு உலக அளவில் நடத்திய ஆய்வு ஒன்றில், கடந்த 2012-ம் ஆண்டில் மட்டும் காற்று மாசுப்பாட்டின் பாதிப்பால் உலகம் முழுவதும் 70 லட்சம் பேர் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
வெளியுலகில் வாகன புகை, நிலக்கரி, காடுகள் எரிப்பது ஆகியவை மூலம் சுமார் 30 லட்சம் பேர் இறந்துள்ளனர். சமையலுக்கு விறகு, நிலக்கரிகளை எரிப்பதன் மூலம் 40 லட்சம் பேரும் உயிர் இழந்துள்ளனர் என்று அந்த ஆய்வு அறிக்கையை வெளியிட்ட அமைப்பின் தலைவர் மரியா அறிவித்துள்ளார்.
குறிப்பாக ஆசிய நாடுகளில் இவ்வகை பதிப்பு அதிகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த காற்று மாசுபடுதல் இருதய கோளாறு, வலிப்பு மற்றும் நுரையீரல் புற்றுநோய் உண்டாகிறது என்பது கூடுதல் தகவலாகும்.