Home இந்தியா இந்திய முஜாஹிதீன் அமைப்பின் தலைவன் கைது!

இந்திய முஜாஹிதீன் அமைப்பின் தலைவன் கைது!

540
0
SHARE
Ad

pathkalபுதுடில்லி, மார்ச் 26 – இந்திய முஜாஹிதீன் இயக்கத் தலைவனான தெஹ்சீன் அக்தர் (எ) மோனு என்பவனை டில்லி சிறப்பு காவல் துறையினர் இந்திய-நேபாள எல்லையில் கைது செய்தனர்.

எதிர்வரும் இந்திய நாடாளுமன்ற தேர்தலை சீர்குலைக்கவும், பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்தவும், திட்டம் தீட்டி வந்த இந்திய முஜாஹிதீன் அமைப்பைப் பற்றி, உளவுத்துறை அளித்த தகவலின் படி டெல்லி சிறப்பு காவல் துறையினர், கடந்த ஞாயிற்றுக்கிழமை  5 பேரை கைது செய்தனர், இந்நிலையில் அந்த அமைப்பின் தலைவனான தெஹ்சீன் அக்தர் பிடிபட்டுள்ளதன் மூலம் பல உண்மைகள் வெளிவரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து டெல்லி சிறப்பு காவல் பிரிவின் ஆணையர் எஸ் என் ஸ்ரீவத்சவா கூறுகையில், “கடந்த 2010-ம் ஆண்டில் நிகழ்ந்த ஜம்மா மசூதி துப்பாக்கிச் சூடு, வாரணாசி குண்டு வெடிப்பு, 2011-ல் நிகழ்ந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு, 2012-ல் புனே குண்டு வெடிப்பு, கடந்த ஆண்டு ஐதராபாத்தில் நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பு போன்ற தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய இந்த தீவிரவாதிகள் நாட்டின் அமைதியை சீர்குலைக்க பல்வேறு சதி வேலைகளில் ஈடுபடக் காத்திருந்தனர்” என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

யாசின் பத்கல் கைதையடுத்து, இந்திய முஜாஹிதீன் இயக்கத்தை தெஹ்சீன் அக்தர் தலைமை தாங்கி நடத்தி வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.