வாஷிங்டன், மார்ச் 26 – அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் சியாட்டில் அருகேயுள்ள ஓசோ என்ற இடத்தில் நேற்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து அவசரகால மீட்புகுழுவின் இயக்குனர் ஜான் பெனிங்டன் கூறுகையில், “நிலச்சரிவின் போது 30 வீடுகள் சேதம் அடைந்ததாக தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்றனர். அப்போது அகற்றப்பட்ட இடிபாடுகளுக்கிடையே 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்ற நிலையில் மேலும் 6 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது” என்று தெரிவித்தார்.
இதற்கிடையே நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் பலியானவர்கள் தவிர 176 பேரை காணவில்லை என்றும் மாயமான அவர்களை தேடும் பணியில் மோப்ப நாய்கள், சோலார் கருவிகள் மற்றும் மீட்பு விமானம் ஆகியவை பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் மீட்ப்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.