Home உலகம் உக்ரைனுக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி – ஜப்பான் அறிவிப்பு!

உக்ரைனுக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி – ஜப்பான் அறிவிப்பு!

557
0
SHARE
Ad

AJ201303020051Mநெதர்லாந்து, மார்ச் 26 – கிரிமியா விவகாரத்தில் ரஷ்யாவின் தலையீட்டினால் உக்ரைன், அரசு பொருளாதாரம் மற்றும் அரசியல் பிரச்சினையில் சிக்கியுள்ளது. அந்நாட்டிற்கு உதவும் வண்ணம் உலக நாடுகள் நிதி உதவியும், ஆதரவும் அளிக்க முன்வந்துள்ளன. அந்த வகையில் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே, உக்ரைனுக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி அளிப்பதாக உறுதி செய்துள்ளார்.

இது குறித்து நெதர்லாந்தில் நடைபெற்ற அணு பாதுகாப்பு மாநாட்டில் ஜப்பானின் அமைச்சரவைத் தலைமைச் செயலரான யோஷிஹைட் சுகா (படம்) கூறுகையில், உக்ரைன் அரசு தனது பொருளாதார நிலையை உயர்த்தும் வகையில், பிற நாடுகள் உதவி செய்யவேண்டும். அதன் தொடக்கமாக ஜப்பான் அரசு, உக்ரைனுக்கு பொருளாதார சீர்திருத்த ஒப்பந்தத்தை எட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடன் 1.5 பில்லியன் நிதியுதவி செய்கிறது. 1.10 மில்லியன் குறைந்த வட்டி விகிதத்தில் கடனாக அளிக்க்கிறது என்றும் சுகா கூறினார்.

உக்ரைனுக்கு நிதி அளிப்பது தொடர்பாக ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே முன்பே தங்கள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.