Home உலகம் காஷ்மீர் பொதுவாக்கெடுப்பை மீண்டும் வலியுறுத்தும் பாகிஸ்தான்!

காஷ்மீர் பொதுவாக்கெடுப்பை மீண்டும் வலியுறுத்தும் பாகிஸ்தான்!

594
0
SHARE
Ad

india.kashmir.delhi.lgஇஸ்லாமாபாத், அக்டோபர் 3 – இந்தியா பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக இருந்து வரும் காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க பொது வாக்கெடுப்பு ஒன்றே தீர்வு என பாகிஸ்தான் மீண்டும் இந்தியாவை வலியுறுத்தி உள்ளது.

காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஐ.நா.சபையில் அந்நாட்டின் பிரதமர் நாவாஸ் செரிப் உரையாற்றி உள்ள நிலையில், அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் அது போன்றதொரு கோரிக்கையை மீண்டும் இந்தியாவிடம் வைத்துள்ளது.

இது தொடர்பாக நடைபெற்ற கூட்டமொன்றில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தஸ்நிம் அஸ்லாம் கூறியயுள்ளதாவது:-

#TamilSchoolmychoice

“காஷ்மீர் மக்களின் விருப்பப்படி பொதுவாக்கெடுப்பு நடத்துவது ஒன்றே காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வாகும். காஷ்மீர் விவகாரம் ஒரு சட்டப்பிரச்சனை. பொது வாக்கெடுப்பை வலியுறுத்தும் காஷ்மீர் மீதான ஐ.நா. தீர்மானத்திற்கு, இந்திய-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ஒரு மாற்றுத் தீர்வாக அமையாது. இந்தியாவுடன் போடப்பட்ட சிம்லா ஒப்பந்தத்தின் காரணமாக ஐ.நா. தீர்மானத்தை செயலிழக்கச் செய்து விட முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.

ஐ.நா.வில் நாவாஸ் செரிப் காஷ்மீர் பற்றி எழுப்பிய விவாதங்களுக்கு இந்தியா கடுமையான கண்டனங்களை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.