Home உலகம் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் அமெரிக்காவுடன் இணைகிறது இந்தியா!

செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் அமெரிக்காவுடன் இணைகிறது இந்தியா!

586
0
SHARE
Ad

US_India_Flag_by_Raza786வாஷிங்டன், அக்டோபர் 3 – அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ ஆகியவை எதிர்காலத்தில் செவ்வாய் கிரகம் குறித்த கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன.

இந்தியாவின் இஸ்ரோ ஆய்வு மையம் சமீபத்தில் மங்கள்யான் விண்கலத்தை முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரக சுற்றுவட்டபாதையில்  நிலைநிறுத்தியது.

உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்த இந்த முயற்சிக்கு அமெரிக்காவின் நாசா உள்ளிட்ட பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகள் மற்றும் உலக நாடுகள் பாராட்டுகளைத் தெரிவித்தன.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இந்தியப் பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம் காரணமாக, இந்தியா மற்றும் அமெரிக்காவின் நட்பு மெருகேறியது.

இதனை உணர்த்தும் விதமாக பல்வேறு சிறப்பு திட்டங்களை இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக செயல்படுத்த உள்ளன. அவற்றில் மிக முக்கியமான ஒன்று செவ்வாய் கிரக கூட்டு ஆராய்ச்சி.

சமீபத்தில் டொரண்டோ நகரில் நடந்த அனைத்துலக விண்வெளி மாநாட்டில், இரு ஆய்வு மையத்தின் தலைவர்களும் இது தொடர்பாக சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பின்போது, செவ்வாய் கிரகம் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக முதலில் இரு நாட்டு ஆராய்ச்சியாளர்களும் இணைந்த பணிக் குழு ஒன்றை அமைப்பது குறித்த விவாதம் நடத்தப்பட்டது.

மேலும், எதிர்காலத்தில் செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வது, பூமி பற்றிய ஆராய்சிகளை மேற்கொள்ளவது போன்ற சிறப்பான திட்டங்கள் தொடர்பாக இரு தலைவர்களும் ஒப்பந்தங்களை மேற்கொண்டனர். நிசார் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய திட்டம் எதிர்வரும் 2020-ல் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகின்றது.