Home கலை உலகம் இந்தியில் படமாகிறது ‘வேலையில்லா பட்டதாரி’ தனுஷே நடிக்கிறார்!

இந்தியில் படமாகிறது ‘வேலையில்லா பட்டதாரி’ தனுஷே நடிக்கிறார்!

629
0
SHARE
Ad

vip,சென்னை, அக்டோபர் 3 – தனுஷ்-அமலாபால் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றியடைந்த படம் ‘வேலையில்லா பட்டதாரி’. இப்படத்தை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கியிருந்தார்.

அனிருத் இசையமைத்திருந்தார். தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ சார்பில் தயாரித்திருந்தார்.  75 நாட்களையும் தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தை தற்போது இந்தியிலும் படமாக்க முடிவு செய்துள்ளனர்.

இந்தியில் தனுஷ் கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்திருந்ததில், தற்போது தனுஷையே இந்தியிலும் நடிக்கவைக்க முடிவு செய்துள்ளனர். படத்தை தமிழில் இயக்கிய வேல்ராஜே இயக்குவார் என தெரிகிறது.

#TamilSchoolmychoice

vip_17714_m1தனுஷ் இந்தியில் நடித்த ‘ராஞ்சனா’ படம் பெரும் வெற்றியடைந்தது. அப்படத்தை தொடர்ந்து தற்போது அமிதாப்பச்சனுடன் இணைந்து ‘ஷமிதாப்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். ஆகையால், வேலையில்லா பட்டதாரி படத்தின் இந்தி மறுபதிவிலும் தனுஷையே நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்களாம்.