Home கலை உலகம் இன்று சீயான் விக்ரம் பங்கேற்கும் ‘நட்சத்திர சரவெடி’ கலைவிழா!

இன்று சீயான் விக்ரம் பங்கேற்கும் ‘நட்சத்திர சரவெடி’ கலைவிழா!

680
0
SHARE
Ad

vikramகோலாலம்பூர், அக்டோபர் 4 – ‘நட்சத்திர சரவெடி’ கலைவிழா நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் சீயான் விக்ரம் மலேசியா வந்துள்ளார்.

மலேசியாவில் இன்று அக்டோபர் 4-ம் தேதி, சனிக்கிழமை, கோலாலம்பூர் புக்கிட் ஜாலில் அரங்கில் இரவு 7.45 மணிக்கு ‘நட்சத்திர சரவெடி’ கலைவிழா நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியை மலேசியாவின் ‘மை இவெண்ட்’ நிறுவனமும், இந்தியாவின் ‘எபிக் இவெண்ட்’ நிறுவனமும் இணைந்து நடத்துகிறது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கவும், முன்னின்று நடத்தி தருவதற்கும் விக்ரம்  மலேசியா வந்துள்ளார்.

#TamilSchoolmychoice

மலேசியா வருகை குறித்து விக்ரம் கூறுகையில், ” மலேசியாவை நான் மிகவும் நேசிக்கிறேன். மலேசிய மக்களையும், அவர்களின் ரசனைகளையும் வெகுவாக நேசிக்கிறேன். நீங்கள் அனைவரும் ‘நட்சத்திர சரவெடி’ நிகழ்ச்சியில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறினார் விக்ரம்.

விக்ரம் நடிப்பில், ஷங்கரின் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாக உள்ள படம் ‘ஐ’. இப்படத்தின் முனோட்டத்தை இதுவரை 70 இலட்சம் பேர் பார்த்துள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது.