Home உலகம் பாகிஸ்தானின் பொறுமையை இந்தியா சோதிக்கிறது – பர்வேஸ் முஷரப்! 

பாகிஸ்தானின் பொறுமையை இந்தியா சோதிக்கிறது – பர்வேஸ் முஷரப்! 

601
0
SHARE
Ad

Musharaffஇஸ்லாமாபாத், அக்டோபர் 6 -இந்தியா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருவது பாகிஸ்தானின் பொறுமையை சோதிப்பதாக உள்ளது என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் (படம்) கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் பல வருடங்களுக்கு முன்பே ஏற்படுத்தப்பட்டாலும், இந்திய எல்லைகளை பாகிஸ்தானும், பாகிஸ்தான் எல்லைகளை இந்தியாவும், தொடர்ந்து அத்துமீறி வருவதாக ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் இராணுவத் தளபதியும், முன்னாள் அதிபருமான பர்வேஸ் முஷரப், இந்தியா குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், இந்தியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதல்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பாகிஸ்தான் இராணுவத்தின் பொறுமையை சோதிப்பதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

அரசியல் சர்ச்சையில் சிக்கி உள்ள முஷரப், பாகிஸ்தான் மக்களிடம் தனது மதிப்பினை உயர்த்திக் கொள்வதற்காகவே இந்தியா குறித்த கருத்தினை தெரிவித்துள்ளதாக இந்திய வட்டாரங்கள் கூறிவருகின்றன.