Home உலகம் இலங்கைக்கு எதிராக உலக நாடுகள் கூட்டு சதி – ராஜபக்சே குற்றச்சாட்டு!

இலங்கைக்கு எதிராக உலக நாடுகள் கூட்டு சதி – ராஜபக்சே குற்றச்சாட்டு!

581
0
SHARE
Ad

rajapakse-sliderகொழும்பு, அக்டோபர் 6 – மனித உரிமை விவகாரத்தில் இலங்கை அரசுக்கு எதிராக உலக நாடுகள் சதித் திட்டம் தீட்டி வருவதாக அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே குற்றம் சாட்டி உள்ளார்.

மனித உரிமை மீறல் விவகாரம் குறித்து இலங்கை அதிபரின் கருத்தினை அவரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. அதில் ராஜபக்சே கூறியிருப்பதாவது:-

“ஜெனீவாவில், ஐநா.மனித உரிமைகள் ஆணையத்தின் முன்பாக, இலங்கை அரசுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட வெளிநாடுவாழ் இலங்கை நாட்டவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

#TamilSchoolmychoice

“இலங்கையில் எனது தலைமையிலான அரசுக்கு எதிராக சில நாடுகள் சதித் திட்டம் தீட்டி வருகின்றன. அது குறித்த தகவல்கள் எனது கவனத்திற்கு  வந்துள்ளன” என்று அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில், இலங்கை மீதான நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லை என அமெரிக்கா தெரிவித்து இருந்த கருத்துக்கு ராஜபக்சே இவ்வாறு விமர்சனம் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

உலக நாடுகள், விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் நடத்திய மனித உரிமை மீறல் குறித்து ஐ.நா. அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.