Home நாடு சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து முன்னாள் மந்திரி பெசார் காலிட் விலகலா?

சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து முன்னாள் மந்திரி பெசார் காலிட் விலகலா?

703
0
SHARE
Ad

khalid-ib-jun20கோலாலம்பூர், அக்டோபர் 6 – போர்ட் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் விலகப்போவதாக வெளியான தகவலை அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளன.

இத்தகைய தகவல்கள் அடிப்படை ஆதாரமற்ற வதந்திகள் என அத்தொகுதியின் சிறப்பு அதிகாரி பயிகா ஹூசேன் தெரிவித்தார்.

மந்திரி பெசார் பதவியில் இருந்து விலகிய பின்னர் விடுப்பில் சென்றுள்ள காலிட் இப்ராகிம் தமது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது.

#TamilSchoolmychoice

மேலும் சிலாங்கூர் சட்டமன்றம் வரும் நவம்பர் மாதம் மீண்டும் கூடுவதற்கு முன்பாகவே அவர் பதவி விலகுவார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் இத்தகைய தகவல்களை காலிட்டுக்கு நெருக்கமான வட்டாரங்கள் மறுத்துள்ளன.

“சிலாங்கூர் மந்திரி பெசாராக காலிட் ஆற்றிய பணிகளை விட வேறு யாராலும் சிறப்பாகவோ அல்லது அவற்றுக்கு நிகராகவோ பணியாற்றுவது என்பது மிக கடினமான ஒன்று. அந்தளவு சிறந்த சேவையை வழங்கி உள்ளார் காலிட். அவர் பதவி விலகுவதாக அரசியல் எதிரிகள் சிலர் கதை கட்டி உள்ளனர். அத்தகைய வதந்திகளை அவரது ஆதரவாளர்கள் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்,” என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதா தகவல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.