Home வணிகம்/தொழில் நுட்பம் தீபாவளி வெளியீடாக இந்தியாவில் ஐபோன் 6 வெளியாகிறதா? 

தீபாவளி வெளியீடாக இந்தியாவில் ஐபோன் 6 வெளியாகிறதா? 

538
0
SHARE
Ad

iPhone 6 launchபுதுடெல்லி, அக்டோபர் 6 – ஆப்பிள் நிறுவனம் தனது சமீபத்திய வெளியீடான ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் திறன்பேசிகளை இந்தியாவில் தீபாவளித் திருநாளை ஒட்டி வெளியிட தீர்மானித்துள்ளதாக ஆருடங்கள் கூறப்படுகின்றன.

ஆப்பிளின் தலைமை நிர்வாகம் ஐபோன் 6-ஐ வரும் நவம்பர் மாதமே இந்தியாவில் வெளியிட முடிவு செய்திருந்தது. எனினும் இந்தியாவில் உள்ள ஆப்பிளின் கிளை மையம், புதிய திறன்பேசிகளை பண்டிகை நாட்களை ஒட்டி உடனடியாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாக ஆப்பிள் வட்டாரங்கள் கூறுகின்றன.

சீன வர்த்தகத்தில் ஆப்பிள் முனைப்பு:

#TamilSchoolmychoice

ஆசிய நாடுகளில் சீனாவும், இந்தியாவும் பெரும் வர்த்தக சந்தைகளாக விளங்கினாலும், சீனாவை ஒப்பிடுகையில் இந்தியாவில் ஐபோன்களுக்கு வரவேற்பு குறைவாக இருக்கின்றது.

ஆப்பிள் பற்றிய் மதிப்பு இந்திய வாடிக்கையாளர்களிடையே உயர்வாக இருந்தாலும், அதன் விலையின் காரணமாக, ஐபோன்கள் இந்திய நடுத்தர வர்க்கத்தினரை இன்னும் சென்றடைய வில்லை.

இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு தனது வர்த்தகத்திற்கு முன்னுரிமை கொடுக்கின்றது. மேலும், சமீபத்தில் சீனாவும் ஐபோன் 6-ஐ வெளியிட சம்மதம் தெரிவித்து உள்ளதால், ஆப்பிள் தற்சமயம் சீன வெளியீட்டில் முனைப்பு காட்டி வருகின்றது.

‘கிரே மார்க்கெட்’ (Grey Market)

ஆப்பிள் வெளியீட்டில் தாமதம் செய்து வருவதால், தற்போது கிரே மார்க்கெட் எனும் அதிகாரப்பூர்வமற்ற விற்பனை சந்தைகள் இந்தியாவில் பெருகி வருகின்றன. ‘இபே’ (ebay) போன்ற இணைய வர்த்தக தளங்கள் மூலம் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் திறன்பேசிகள் 57,990 ரூபாய் முதல்  ஒரு லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக ஆப்பிளின் இந்தியக் கிளை ஐபோன் 6-ன்  இந்திய வெளியீட்டில் தீவிரம் காட்டி வருகின்றது. மேலும், இம்மாதம் 23-ம் தேதி இந்தியாவில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால், ஐபோன் 6 ஐ இம்மாதம் 20-ம் தேதிக்குள் வெளியிட கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

மலேசியாவைப் பொருத்தவரை ஐபோன் 6 -ன் வெளியீடு இந்தியாவிற்கு பிறகே நடக்கும் என்பது திண்ணம். காரணம் இந்திய சந்தைகள் பற்றிய ஆப்பிள் நிறுவனத்தின் கணிப்பு எப்பொழுதும் சரியாகவே இருந்து வருகின்றது. எனினும், ஆப்பிள் இந்திய வெளியீட்டில் அவசரம் காட்டாது என ஒரு சாரார் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.