Home இந்தியா பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய எல்லையில் பக்ரீத் கொண்டாட்டம் ரத்து!

பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய எல்லையில் பக்ரீத் கொண்டாட்டம் ரத்து!

624
0
SHARE
Ad

wagah-borderபுது டெல்லி, அக்டோபர் 7 – பக்ரீத் பண்டிகையின்போது, பஞ்சாப் மாநிலம் வாஹா எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் இந்திய ராணுவ வீரர்களும், பாகிஸ்தான் படையினரும் பரஸ்பரம் இனிப்புகளை பரிமாறிக் கொள்வது வழக்கம்.

ஆனால், எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்கள் தொடரும் நிலையில், இனிப்புகளை வழங்கும் பாரம்பரிய நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படை வட்டாரங்கள் கூறியதாவது,

“பக்ரீத் பண்டிகையையொட்டி, இனிப்புகளை பரிமாறிக் கொள்வதற்கான நேரத்தை நிர்ணயிப்பதற்கு பாகிஸ்தான் தரப்பு மறுத்துவிட்டது. இதற்கு எந்தக் காரணங்களையும் பாகிஸ்தான் தெரிவிக்கவில்லை. எனினும், பாகிஸ்தான் தரப்பிலிருந்து அத்துமீறி வருவதால் எழுந்துள்ள பதற்றமான சூழ்நிலையை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது” என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

#TamilSchoolmychoice

wagah-border-ceremonyஇதனையடுத்து, வாஹா எல்லையில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் இனிப்புப் பரிமாற்றம் தொடர்பான எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. சோதனைச் சாவடியில் உள்ள கதவுகள் மூடியே காணப்பட்டன.

இதனிடையே, பாகிஸ்தான் தாக்குதலில் 5 பேர் பலியான ஜம்மு மாவட்டம், ஆர்னியாவுக்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா திங்கள்கிழமை சென்றார்.

அங்கு பக்ரீத் பண்டிகையையொட்டி நடைபெற்ற தொழுகையில் கலந்து கொண்ட அவர், பின்னர் மருத்துவமனைக்குச் சென்று ரத்த தானம் செய்தார்.

wagah-border-amritsarஅதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தாக்குதலில் காயமடைந்து ஜம்மு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதில் தோல்வியடைந்துவிட்ட விரக்தியால், கிராமங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது’ எனக் குற்றம்சாட்டினார்.