Home இந்தியா ஜெ.யின் பிணை மனு விசாரணை தொடங்கியுள்ளது. கர்நாடக – தமிழக எல்லையில் மக்கள் குழுமத் தொடங்கினர்

ஜெ.யின் பிணை மனு விசாரணை தொடங்கியுள்ளது. கர்நாடக – தமிழக எல்லையில் மக்கள் குழுமத் தொடங்கினர்

547
0
SHARE
Ad

Jayalalithaபெங்களூரு, அக்டோபர் 7 – இன்று விசாரணைக்கு வரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழக்கு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 73வது வழக்காக வரிசையில் காத்திருந்தது என்றும் தற்போது அதன் விசாரணை தொடங்கி விட்டது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா வழக்கோடு அவருடன் சேர்ந்து தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் வழக்குகளுக்கான பிணை மனுவும் இன்றே விசாரிக்கப்படும் எனத் தெரிகின்றது.

கர்நாடகத்தில் தசரா விடுமுறைகளுக்காக உயர் நீதிமன்றம் விடுப்பில் இருந்ததால், ஜெயலலிதாவின் வழக்கு இன்று ஒத்தி வைக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

ஜெயலலிதா இன்று விடுதலை ஆவார் என்ற எதிர்பார்ப்பில் தமிழக – கர்நாடக எல்லை நகரான ஓசூரில் அதிமுக ஆதரவாளர்கள் குழுமத் தொடங்கியுள்ளனர்.

ஓசூர் வழியாக பல அதிமுக ஆதரவாளர்களும், தலைவர்களும் பெங்களூர் நோக்கி படையெடுக்கக் காத்திருக்கின்றனர்.

ஜெயலலிதா விடுதலையானால் அவருக்கு மாபெரும் வரவேற்பு வழங்க அதிமுக கட்சியினர் தயாராகி வருகின்றனர்.

இதற்கிடையே, கர்நாடக காவல் துறையினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தி உள்ளனர்.

கடந்த செப்டம்பர் 27 முதல், ஜெயலலிதா சிறை வைக்கப்பட்டிருக்கும் பரப்பன அக்ரகார மத்திய சிறைச்சாலைப் பகுதியைச் சுற்றி 1 கிலோமீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எல்லாவித நிலைமைகளையும் சமாளிக்க கர்நாடக காவல் துறையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.