Home இந்தியா பிணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு – ஜெயலலிதா வழக்கறிஞர் தகவல்

பிணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு – ஜெயலலிதா வழக்கறிஞர் தகவல்

412
0
SHARE
Ad

25VBG_JAYA_168965fபெங்களூரு, அக்டோபர்  7 – சொத்துக்குவிப்பு வழக்கில் பிணை அளிக்க கர்நாடகா உயர்நீதிமன்றம் மறுத்து விட்ட நிலையில், அடுத்தக் கட்ட முயற்சியாக ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளனர்.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நாளையே பிணை கோரி மனுத்தாக்கல் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று பிணை மறுக்கப்பட்ட நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார், “கர்நாடகா நீதிமன்றம் பிணை மறுத்தது தொடர்பிலான உத்தரவு மீதான முறையான ஆணவங்கள் கிடைத்ததும், உச்சநீதிமன்றத்திற்குச் செல்வோம்,” என்றார்.

#TamilSchoolmychoice

ஜெயலலிதாவுக்காக பிணை கோரி வாதாடிய பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கூறுகையில், “ஜெயலலிதா தரப்புடன் கலந்தாலோசித்த பின்னர் உச்சநீதிமன்றத்தை நாடுவது குறித்து உடனடியாக முடிவு செய்யப்படும்,” என்று தெரிவித்தார்.

ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்படும் பிணை மனுவை, அவசர மனுவாக கருதி விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்படும் எனத் தெரிகிறது.