Home உலகம் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் – அமெரிக்கா கவலை!

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் – அமெரிக்கா கவலை!

770
0
SHARE
Ad

Indiaவாஷிங்டன், அக்டோபர் 8 – இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தற்போது நிலவி வரும் போர் பதற்றம் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இரு நாடுகளும் சமாதானப் பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் எனவும் அந்நாடு கேட்டுக்கொண்டுள்ளது. எல்லைப் பிரச்சனை தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஜென் பசாகி கூறியுள்ளதாவது:-

“இருநாட்டு எல்லையில் நிலவி வரும் பதற்றம் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் எங்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளன. பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதனை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் அவர், காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்தஒரு மாற்றமும் இருக்காது. இதில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் தான் முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இராணுவ நிலைகள் மற்றும் எல்லையோர கிராமங்களில் பாகிஸ்தான் இராணுவம் கடந்த ஒருவார காலமாக தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 5 அப்பாவி பொதுமக்கள் பலியாகி உள்ளனர். 31 பேர் காயம் அடைந்துள்ளனர்.