Home இந்தியா அமைதி காப்பதே ஜெயலலிதாவிற்கு செலுத்தும் உண்மையான அன்பு – ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்!

அமைதி காப்பதே ஜெயலலிதாவிற்கு செலுத்தும் உண்மையான அன்பு – ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்!

659
0
SHARE
Ad

o-pannerselvamசென்னை, அக்டோபர் 8 – தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக எதிர்கட்சியினர் தவறாக பிரச்சாரம் செய்வதாக கூறியுள்ள அவர், கடையடைப்பு, வேலைநிறுத்தம் போன்ற போராட்டத்திற்கு யாரும் அழைப்பு விடுக்கவேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைதி, வளம், வளர்ச்சி என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு தமிழகம் அமைதியான சூழலில் வளர்ச்சிப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது”.

“ஆனால் சிலர் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு, வளர்ச்சித்திட்டங்கள் குறித்து தலைமைச் செயலகத்தில் தலைமையில் நடைபெற்றது.”

#TamilSchoolmychoice

“இக்கூட்டத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது என்றும், மக்களின் அன்றாட பணிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.”

“அம்மா மீதுள்ள அன்பால் தொண்டர்கள் உணர்ச்சி வசப்பட்டு மேற்கொள்ளும் அறப்போராட்டங்களுக்கு தமிழ்நாடு அரசை இணைத்துப்பேசுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல”.

“தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. எதிர்கட்சியினரின் மாயவலையில் சங்கங்கள், அமைப்புகள் யாரும் விழவேண்டாம். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு போராட்டங்களையும் அம்மா விரும்ப மாட்டார்கள்”.

“எனவே கடையடைப்பு, வேலைநிறுத்தம் போன்ற போராட்டங்களில் யாரும் ஈடுபடவேண்டாம். இதுவே புரட்சித்தலைவி ஜெயலலிதாவிற்கு மாறாத பாசத்தையும், பற்றையும், அன்பையும் வெளிப்படுத்தும் செயலாகும்” என்று ஓ.பன்னீர் செல்வம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.