புதுடெல்லி, அக்டோபர் 9 – ‘ஸ்கைப்’ என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தகவல் பரிமாற்ற மென்பொருளாகும். உள்ளூர், உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கு இடையே குரல்வழி மற்றும் காணொளி தொலைதொடர்பை வழங்கி வந்தது ஸ்கைப் சேவை.
இதனிடையே வரும் நவம்பர் 10-ம் தேதி முதல் ‘ஸ்கைப்’ தனது சேவையை இந்தியாவில் உள்ள உள்ளூர் அழைப்புகளுக்கு நிறுத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஏற்கெனவே வாட்ஸ் அப், வைபர் போன்ற உடனடி தகவல் பரிமாற்ற தொலைதொடர்பு நிறுவனங்களின் வருவாய் குறைந்துள்ளது என அந்த நிறுவனங்கள் வலியுறுத்தி இருந்தன.
இந்நிலையில் வரும் நவம்பர் 10-ம் தேதி முதல் இந்தியாவில் உள்ளூர் அழைப்புகளை நிறுத்திக்கொள்ளப்போவதாக ஸ்கைப் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதேசமயம் “ஸ்கைபில் இருந்து ஸ்கைப்” தகவல் பரிமாற்ற வசதியை இந்தியாவிற்குள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும், மற்ற செல்பேசி அல்லது விட்டு இணைப்பு தொலைபேசிகளை தொடர்பு கொள்ள முடியாது என்றும் ஸ்கைப் அறிவித்துள்ளது.