Home கலை உலகம் ரஜினியின் ‘லிங்கா’ படத்தில் நடிக்க மறுத்த தம்பி ராமையா!

ரஜினியின் ‘லிங்கா’ படத்தில் நடிக்க மறுத்த தம்பி ராமையா!

643
0
SHARE
Ad

lingaசென்னை, அக்டோபர் 9 – நடிகர் தம்பி ராமையா இப்போது அனைத்துத் தரப்பு இயக்குநர்களாலும் தேடப்படும் நடிகராக மாறியிருக்கிறார். இப்போது நிறைய படங்களில் நடித்து வருவதால் அவரால் ரஜினி படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.

மைனாவில் சிறந்த நடிகராக அறிமுகமாகி இப்போது வரையிலும் பல வெற்றிப் படங்களிலும் நடித்திருக்கும் தம்பி ராமையாவின் இனிமையான பழகும் தன்மை அனைவருக்கும் பிடித்துப் போயிருக்கிறது.

தம்பி ராமையா தற்போது சித்தார்த் நடித்துள்ள ‘காவியத்தலைவன்’ படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கார்த்தியின் ‘கொம்பன்’ படத்திலும், சிம்புத்தேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திலும் தம்பி ராமையா நடித்து வருகிறார்.

#TamilSchoolmychoice

இந்த காரணத்தால் இந்த வருடம் ஒரு முக்கியமான படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். அது சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா படம் தானாம்.

இந்தப் படத்தில் நடிப்பதற்காக கே.எஸ்.ரவிக்குமார் தம்பி ராமையாவை கேட்டும் அவரால் நடிக்க முடியவில்லையாம். காரணம் ஓய்வில்லாமல் பல படங்களில் நடித்து வருகிறாராம் தம்பி ராமையா.

லிங்கா படத்திற்காக தொடர்ச்சியாக 32 நாட்கள் கேட்ட தேதிகளில் காவியத்தலைவன் படத்தில் நடிக்க ஏற்கெனவே ஒப்புக் கொண்டுவிட்டதால் ‘லிங்கா’ படத்தில் நடிக்க முடியவில்லை என்கிறார் தம்பி ராமையா.

எத்தனையோ நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அவரது படத்திலேயே நடிக்க முடியாத அளவுக்கு தம்பி ராமையா ஓய்வில்லாமல் இருக்கிறார்.