இரண்டு நாட்களுக்கு முன் ‘கத்தி’ படத்தின் ஆண்ட்ராய்டு செல்பேசி விளையாட்டு வெளியிடப்பட்டது. தீவிரவாத கும்பல் வசம் உள்ள சமந்தாவை காப்பாறுவது, துப்பாக்கி சுடுவது என அனல் பறக்கும் இந்த ஆண்ட்ராய்டு விளையாட்டு இப்போது 45, 000 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
இதற்கு முன்பு ’க்ரிஷ்’, ’ராஒன்’ மற்றும் ‘கோச்சடையான்’ படங்களின் விளையாட்டு தான் முதலிடத்தில் இருந்தன. இந்தப் படங்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டு ‘கத்தி’ முதலிடம் பிடித்ததோடு கூகுள் ‘ப்ளே ஸ்டோரிலும்’ முன்னணி இடம் பிடித்துள்ளது.