Home உலகம் ஈராக்கில் தீவிரவாதிகளுக்கு எதிரான விமான தாக்குதலில் ஆஸ்திரேலியா பங்கேற்பு!

ஈராக்கில் தீவிரவாதிகளுக்கு எதிரான விமான தாக்குதலில் ஆஸ்திரேலியா பங்கேற்பு!

633
0
SHARE
Ad

australiaசிட்னி, அக்டோபர் 9 – ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மீதான தாக்குதலில் ஆஸ்திரேலியாவும் இணைந்துள்ள நிலையில், போர் விமானத்தைக் கொண்டு 2 குண்டுகளை வீசியதன் மூலம் தனது முதல் விமான தாக்குதலை ஆஸ்திரேலியா நடத்தியுள்ளது.

எப்-18 ரக சூப்பர் ஃபைட்டர் ஜெட் விமானம் புதன்கிழமை இரவில், ஈராக்கில் தீவிரவாதிகள் நிலைகள் மீது, இரு குண்டுகளை வீசி தனது பங்களிப்பை பதிவு செய்துள்ளது.

இலக்குகளை குறிவைத்து சரியாக தாக்குதல் நடத்திய அந்த விமானம் பத்திரமாக தனது தளத்துக்கு வந்து சேர்ந்ததாக ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

தீவிரவாதத்துக்கு எதிரான போரில், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுடன் கைகோர்த்துள்ளதாக அறிவித்த ஆஸ்திரேலியா மேற்கொண்ட முதல் தாக்குதல் இதுவாகும்.

australia-650மேலும், தங்கள் நாட்டின் 200 ராணுவ வீரர்களை ஈராக்கிற்கு அனுப்பி வைக்கவும் ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலிய மக்களின் கழுத்தை அறுத்து கொலை செய்வோம் என்று ஐஎஸ்ஐஎஸ் மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நிலைப்பாட்டை அந்த நாடு எடுக்க தொடங்கியுள்ளது.

தீவிரவாதிகளுக்கு உதவுவோரை கண்டுபிடிக்க ஆஸ்திரேலியா முழுவதும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.