Home கலை உலகம் ஜெயம் ரவியின் ‘பூலோகம்’ படம் தீபாவளிக்கு வெளியீடா?

ஜெயம் ரவியின் ‘பூலோகம்’ படம் தீபாவளிக்கு வெளியீடா?

744
0
SHARE
Ad

boologamசென்னை, அக்டோபர் 9 – ஜெயம் ரவி நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம் ‘பூலோகம்’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ராஜேஷ், பொன்வண்ணன், ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் வசனம் எழுத, என்.கல்யாண் கிருஷ்ணன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்திருக்கிறார்.

வட சென்னையில் குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பல மாதங்கள் ஆகின்றது.

#TamilSchoolmychoice

Bhooloham-Movie-First-Look-Posterநீண்ட நாட்களாக படம் வெளிவரும் வெளிவரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில்,  படத்தை தீபாவளி அன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே தீபாவளி அன்று, விஜய்யின் ‘கத்தி’, விஷாலின் ‘பூஜை’ ஆகிய படங்கள் வெளியாகின்றன. தனது தயாரிப்பான ‘ஐ’ படம் வெளியீடு நவம்பர் மாதத்திற்கு தள்ளிப் போனதால், பூலோகம் படத்தை தீபாவளிக்கு வெளியிட ஆஸ்கர் ரவிச்சந்திரன் முடிவு செய்துள்ளாராம். எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.