Home நாடு புக்கிட் பிந்தாங் குண்டுவெடிப்பு: கார் நிறுத்தும் உதவியாளர் மரணம்!

புக்கிட் பிந்தாங் குண்டுவெடிப்பு: கார் நிறுத்தும் உதவியாளர் மரணம்!

838
0
SHARE
Ad

Bukit Bintang bombகோலாலம்பூர், அக்டோபர் 9 – இன்று அதிகாலை நடந்த புக்கிட் பிந்தாங் குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த 14 பேரில், ஒருவர் உயிரிழந்தார்.

படுகாயமடைந்த தியாங் குவாங் யி (வயது 36) என்ற கார் நிறுத்தும் உதவியாளர் (கார் ஜாக்கி) தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்தார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்ததாக புலனாய்வுத்துறையின் மூத்த துணை ஆணையர் கான் கோங் மெங் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் இந்த சம்பவத்தில் காயமடைந்த இரண்டு சீன நாட்டவர்கள், இரண்டு சிங்கப்பூரர்கள் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 13 பேருக்கு கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.