Home வாழ் நலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எள் விதைகள்!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எள் விதைகள்!

1102
0
SHARE
Ad

Black_White_Sesame_Seedsஅக்டோபர் 9 – மனிதன் முதன் முதலில் எண்ணெய்ப் பொருளாக பயன்படுத்தியது எள் விதைகளைத்தான். உலகம் முழுவதும் உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படும் பெருமை மிக்கது எள். இதிலுள்ள சத்துக்களை பார்க்கலாம்.

ஆசியப் பகுதிகளான பர்மா, சீனா, இந்தியா போன்ற நாடுகளில் அதிகமாக விளையும் பொருட்களில் எள்ளும் ஒன்று. ஆரோக்கியம் வழங்கும் சத்துப் பொருட்கள், தாது உப்புக்கள், நோய் எதிர்ப்பு பொருட்கள், வைட்டமின்கள் எள்ளில் காணப்படுகிறது. எள் விதைகள் அதிக ஆற்றல் தரும் உணவுப் பொருளாகும்.

100 கிராம் எள் விதையில் 573 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. இதிலுள்ள அதிகப்படியான ஆற்றலுக்கு காரணம் கொழுப்புச் சத்து தான். ‘ஆலியிக் அமிலம்’ எனப்படும் கொழுப்பு அமிலம் எள்ளில் சரிபாதி அளவு காணப்படுகிறது.

#TamilSchoolmychoice

Sesame-Seedsஇது கெட்ட கொழுப்பை ரத்தத்தில் குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்யும். எளிதில் ஜீரணமாகும் புரதம் எள்ளில் நிறைந்துள்ளது.

குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு அவசியமான அமினோ அமிலம் இதுவாகும். 100 கிராம் எள் விதையில் 18 கிராம் புரதம் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

sesame seedsஎள்ளில் வைட்டமின்களும், தாது உப்புக்களும் அதிக அளவில் காணப்படுகின்றன.  இது மரபணு (டி.என்.ஏ.) வளர்ச்சி மாற்றத்திற்கு அவசியமான வைட்டமினாகும். நியாசின் எனும் வைட்டமின், ரத்தத்தில் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும்.

மேலும் மூளையின் சிறப்பான செயல்பாட்டிற்கு உதவுவதோடு, கவலை மற்றும் நரம்பு வியாதிகளை தடுக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.