Home இந்தியா ஜெயலலிதாவுக்கு மட்டும் பிணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு! சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு பிணை கோரப்படவில்லை

ஜெயலலிதாவுக்கு மட்டும் பிணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு! சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு பிணை கோரப்படவில்லை

492
0
SHARE
Ad

Jayalalithaaபுதுடெல்லி, அக்டோபர்  9 –  சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பிணை கோரி, உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவருக்காக மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே அல்லது சுஷில் குமார் உச்சநீதிமன்றத்தில் முன்னிலையாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இம்முறை சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பிணை கோரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

தாம் ஒரு பெண் என்பதாலும், தனக்குப் பல்வேறு உடல் உபாதைகள் என்பதாலும், உடல் நலனைக் கருத்தில் கொண்டு தமக்குப் பிணை வழங்க வேண்டும் என ஜெயலலிதா பிணை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம்  ஜெயலலிதாவின் பிணை மனுவை அதிமுக வழக்கறிஞர்கள் தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

ஜெயலலிதாவின் பிணை மனு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தண்டனை பெற்ற நால்வரில் ஜெயலலிதா மட்டுமே முக்கியமான அரசியல் தலைவர் என்பதால், அவரோடு சேர்ந்து மற்ற மூவரின் பிணை மனுவையும் சமர்ப்பிப்பதால், சட்டரீதியாக ஜெயலலிதாவுக்கு பலவீனமாக இருக்கலாம் என்ற வியூகத்தோடு உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு மட்டுமே முதலில் பிணை மனு சமர்ப்பிக்கப்படுள்ளதாகத் தெரிகின்றது.

ஜெயலலிதா விடுதலையாகும் பட்சத்தில் அதன் பின்னர் மற்ற மூவரின் பிணை மனுக்கள் சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.