Home வணிகம்/தொழில் நுட்பம் விலை வீழ்ச்சி: மலேசியாவில் தங்கம் வாங்க மக்கள் ஆர்வம்!

விலை வீழ்ச்சி: மலேசியாவில் தங்கம் வாங்க மக்கள் ஆர்வம்!

10517
0
SHARE
Ad

VBK-GOLD_288908fஜோர்ஜ் டவுன், அக்டோபர் 10 – தங்கத்தின் விலை வேகமாக குறைந்து வரும் நிலையில் மக்களிடையே தங்க நகைகள் வாங்கும் ஆர்வம் வெகுவாக அதிகரித்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை குறைந்திருப்பதால் லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக தீபாவளிக்கு முன்னதாக நகைகள் வாங்க வேண்டும் என்கிற ஆர்வம் சராசரி மக்களின் முகங்களில் கூடத் தென்படுகிறது.

#TamilSchoolmychoice

தற்போது ஒரு கிராம் தங்கத்தின் விலை 122.50 ரிங்கிட்டாக உள்ளது என்று வி.கே.என். ஜுவல்லர்ஸ் மேலாளர் கபில் குமார் ஸ்டார் இணையத்தளத்திடம் கூறுகையில்,

“கடந்த தீபாவளி சமயத்தில் ஒரு கிராம் விலை 135 ரிங்கிட்டாக இருந்தது.இங்குள்ள நகைக் கடைகள் வாடிக்கையாளர்களுக்கு நல்ல சலுகை விலையில் நகைகளை தருகின்றன,” என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு தங்க நகை வியாபாரியான தமிழரசி, இம்மாதத் துவக்கத்தில் இருந்தே தங்க விற்பனை சூடு பிடித்துள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.

பினாங்கு லிட்டில் இந்தியா பகுதி முழுவதும் தீபாவளி பண்டிகைக்கான அலங்காரங்களுடன்
களை கட்டியுள்ளது.

எங்கு திரும்பினாலும் வாழ்த்து அட்டைகள், பல வண்ண மாலைகள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூட சங்கிலிகள் ஆகியன தென்படுகின்றன.

அப்பகுதி முழுவதும் பின்னணியில் ஏதேனும் உரத்த இசை ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
சனிக்கிழமை மதியம் 1 மணிக்கு பிறகும், வார நாட்களில் 6 மணிக்கு பிறகும் இப்பகுதியில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை.இச்சலுகை ஞாயிற்றுக்கிழமை முழு நாளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.