கோலாலம்பூர், அக்டோபர் 10 – இன்று மாலை 4 மணியளவில் பிரதமர் நஜிப் துன் ரசாக் 2015 -க்கான நிதிநிலை அறிக்கையை அறிவிப்பார்.
இந்த நிதிநிலை அறிக்கை மக்களின் அன்றாட வாழ்க்கை செலவீனங்களைக் குறைக்கும் வகையில் சாதகமாக இருக்கும் என்று நிதி அமைச்சருமான நஜிப் நேற்று கோடிட்டுக் காட்டினார்.
மேலும், இந்த நிதிநிலை அறிக்கை நிறைய வேலை வாய்ப்புகள், கல்வி வளர்ச்சி மற்றும் மலிவு விலை வீடுகள் ஆகியவற்றிற்கு உதவியாக இருக்கும் என்றும் நேற்று வெளியிட்ட அறிக்கையில் நஜிப் குறிப்பிட்டிருந்தார்.
அதே வேளையில், ஒரே மலேசியா திட்டத்தின் கீழ் மக்களுக்கு வழங்கப்படும் பிரிம் உதவித் தொகையின் முக்கியத்துவம் குறித்து நஜிப் தெரிவித்தார்.