Home நாடு 2015 மே மாதம்11-வது மலேசியா திட்டம் அறிமுகம்!

2015 மே மாதம்11-வது மலேசியா திட்டம் அறிமுகம்!

703
0
SHARE
Ad

Najibகோலாலம்பூர், அக்டோபர் 10 – நாடாளுமன்றத்தில் இன்று மாலை 4 மணியளவில் 2015 -ம் ஆண்டிற்கான வரவு செலவு கணக்கறிக்கையை பிரதமரும், நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வாசித்தார்.

1. 2014 -ம் ஆண்டின் பணவீக்கம் 3.4% சதவிகிதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது கடந்த 2013-ம் ஆண்டு 2.1 சதவிகிதத்தைக் காட்டிலும் அதிகம்.

2. 2014-ம் ஆண்டின் வேலைவாய்ப்பு இன்மை விகிதம் 3.1 சதவிகிதம் ஆகும். இது கடந்த 2013-ம் ஆண்டு மற்றும் 2011-ம் ஆண்டின் நிலையிலேயே உள்ளது. 2012-ம் ஆண்டு மட்டும் 3% சதவிகிதமாக இருந்தது.

#TamilSchoolmychoice

3. மலேசியாவின் நிதிநிலை வலுவாக உள்ளது. நடப்பு கணக்குகள் 16.6 பில்லியனாக உயர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட 2012-ம் ஆண்டில் இருந்த 17.6 பில்லியனை எட்டும் நிலையில் உள்ளது. 2013 -ம் ஆண்டு நிதிநிலை 12.7 பில்லியன் ஆகும்.

4. வரும் 2015 மே மாதம் 11 வது மலேசியா திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இந்த புதிய அனுகுமுறைக்கு மலேசிய தேசிய வளர்ச்சி வியூகம் (MyNDS) என்று அழைக்கப்படுகின்றது. 11வது மலேசியா திட்டத்திற்குத் தேவையான அனைத்து திட்டங்களும் மலேசிய தேசிய வளர்ச்சி வியூகம் மூலமாக செயல்படுத்தப்படும்.

 மேலும் செய்திகள் தொடரும்…