Home நாடு 2015 வரவு செலவு திட்டம்: 50 மின்சாரப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும்!

2015 வரவு செலவு திட்டம்: 50 மின்சாரப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும்!

525
0
SHARE
Ad

கோலாலம்பூர், அக்டோபர் 10 – நாடாளுமன்றத்தில் 2015-ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை பிரதமரும், நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வாசித்தார்.

1. 2015 -ம் ஆண்டின் வரவு செலவு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்த நிதி 273.9 பில்லியன் ஆகும். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 9.8 பில்லியன் அதிகமாகும் என்று நஜிப் அறிவித்தார்.

2. 2020-ம் ஆண்டிற்குள் உயர் வருமானம் கொண்ட பொருளாதார நிலையை அடைய அரசாங்கம் உறுதி கொண்டுள்ளது.

#TamilSchoolmychoice

3. 2015-ல் கூட்டரசு அரசாங்கத்தின் வருவாய் வசூல் 235.2 பில்லியனை அடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 2014-ம் ஆண்டைக் காட்டிலும் 10.2 பில்லியன் இது அதிகமாகும்.

4. பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கம் செய்யப்பட்டதன் விளைவாக அடுத்த ஆண்டு அரசாங்க வருவாய் 23.2 பில்லியன் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

5. நிறைய பொருட்கள் 3.8 பில்லியன் ஜிஎஸ்டி நிதியில் இருந்து விலக்கப்பட்டுள்ளன.

6. அரசாங்கத்திற்கு திரும்பக் கிடைக்கும் 4.9 பில்லியன் வருவாய் மூலம் பிரிம் போன்ற உதவித் தொகைகள் உயர்த்தப்படவுள்ளது.

7. 2015 வரவு செலவு திட்டம் 7 வியூகங்களைக் கொண்டுள்ளது.

#1. பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவது

#2. நிதி ஆளுமையை பலப்படுத்துவது

#3. மனித மூலதனம் மற்றும் தொழில் வளர்ச்சி

#4. பூமிபுத்ரா செயல்திட்டத்தை முன்னெடுப்பது

#5. பெண்களின் பொறுப்புகளை நிலைநிறுத்துவது

#6. தேசிய இளைஞர் உருமாற்றுத்திட்டத்தை வளர்ப்பது

#7. மக்கள் நல்வாழ்விற்கு முக்கியத்துவம் அளிப்பது.

8. மலேசியாவில் மின்சார வாகன உற்பத்தி தொழிலை வளர்க்க எஸ்எம்இ வங்கி மூலமாக 70 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

9. தொடக்கமாக 50 மின்சார பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும்.

10. தொலைத் தொடர்பு மற்றும் பல்லூடக துறையின் அனிமேசன், திரைப்படம், வடிவமைப்பு போன்றவைகளின் வளர்ச்சிக்காக 100 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள் தொடரும்…